தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்; தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு!

tn secretariat - 2026
#image_title

தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் தங்கம் தென்னரசு. இதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:

  • 4 வழிச்சாலைகள், மேம்பாலங்கள் என தமிழ் நிலப்பரப்பு முன்னேறி வருகிறது.
  • திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • நமது திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒரு புறம் இருக்கிறது.
  • நாட்டிலேயே முதன் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
  • மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு, குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
  • உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம்
  • செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்
  • மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது


தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை இன்று தாக்கல் செய்தார். 

தமிழக சட்டப்பேரவைத்  தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் நிலையில்,  இந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…

தமிழகத்தின் வளர்ச்சி முதல்வர் ஸ்டாலினால் வழி நடத்தப்படுகிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம். ஏஐ உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும். உணவு உற்பத்தியில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1 கோடியே 31 லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் ரூ. 5 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட போது இந்த நாடே திரும்பிப் பார்த்தது.  

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

தமிழர் பெருமையை பறை சாற்றும் வகையில் பல்வேறு அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ நா சபை அங்கீகரித்த மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிறமொழி ஆதிக்கத்திலிருந்து தமிழை பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. சோழர் அருங்காட்சியகம், நவாய் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழகம் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். 

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

கப்பல் கட்டுமானம், கப்பல் இயந்திரங்கள் உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழகம் கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். இதனால் கப்பல் கட்டுமானத்திற்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்கும். தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் கட்டப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்கு 3 கட்டங்களாக ரூ.630 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும். 

நெல்லை, கோவை, திருச்சியில் ரூ.902 கோடியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் இதுவரை 5,40,511 மாணவர்கள் ரூ.1000 பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழக செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும். தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது. திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பார்க் பூங்கா நிறுவப்பட்டும். 

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:

1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு
2. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
3. உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
4. சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
5. ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு
6. சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு
7. நகராட்சி நிர்வாகம் மற்றும் நலன் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு
8. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
9. தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு
10. நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு
11. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22.090 கோடி ஒதுக்கீடு
12. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
13. தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு
14. நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு
15. எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

முன்னதாக, மாபெரும் காது குத்தும் விழா என அதிமுக. அழைப்பிதழுடன் வந்தது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கலையொட்டி ‘காது குத்தும் விழா‘ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்தனர் அதிமுகவினர். பட்ஜெட் என்னும் பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசால் காது குத்தும் விழா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories