சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

1001338020 - 2026

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல் 1ல் பங்குனி உத்திர நாளில் நடைபெறும்.விழாவை முன்னிட்டு மார் 23 ல் கொடியேற்றத்துடன் பத்து நாள் திருவிழா தொடங்கியது.

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 மாலை 5 மணியளவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23(இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 10 நாள்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.

பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். மேலும், திருவிழாவின் நிறைவு நாளாக ஏப்ரல் 1 ஆம் தேதி பம்பைக் கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது.

பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய தேவஸ்வம் வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கம் அறைகள், முன்பதிவுக்கு sabarimala.org.in www.onlinetdb.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது கோடை காலம் என்பதால் கடுமையான வெயில் வறுத்தெடுத்து வருகிறது தினமும் 42 டிகிரிக்கு மேல் வெயில் பாட்டில் எடுத்து வருகிறது பம்பை நதியில் போதிய தண்ணீர் இல்லை ஆராட்டு விழா நடைபெறுவதை ஒட்டி பம்பை நதியில் தண்ணீர் சபரி அணையில் இருந்து திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories