சென்னை: தனது முன்னாள் உதவியாளர், சன் டிவி ஊழியர்கள் இருவர் கைது விவகாரத்தை அடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதியை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று காலை சந்தித்து பேசினார். தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 300க்கும் அதிகமான உயர் வேக தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதிமாறனின் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலராக இருந்த வி.கவுதமன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீசியன் கேஎஸ்.ரவி ஆகியோரை நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், அவர்கள் இன்று சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தயாநிதி மாறன் சந்தித்து பேசினார்.
முன்னாள் உதவியாளர் கைது: கருணாநிதியுடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
Popular Categories