அம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுநாள் எனக் குறிப்பிட்டு குழம்பிப் போனார் குஷ்பு!
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை அம்பேத்கரது நினைவுநாள் என தவறாகக் குறிப்பிட்டார்.
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு நாள் என்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் சுட்டிக்காட்யதால் குஷ்பு தவறை திருத்திக் கொண்டார்.