பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் தொடங்கபபட்டுள்ள இந்த உண்ணாவிரதபோராட்டம் வரும் மே 10 ம் தேதி வரை நடைபெறுகிறது.
ரெயில்வே பள்ளிகளை முழுமையாக மூடும் முயற்சியை கை விட கோரியும், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரியும், SRMU சங்கம் சார்பில் மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவு வாயிலில் உண்ணாவிரத போராட்டம். தொடங்கியுள்ளது.
மதுரை கோட்ட செயலாளர் ரபீக் தலைமையில் 150:பெண் பணியாளர்கள் உள்பட 500 பேர் பங்கேற்றுள்ளனர்.இராமேஷ்வரம் முதல் திருச்சி என்ஜினியரிங் பிரிவை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்திட வேண்டும், அடிப்படை சம்பள விகிதத்தை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.மேலும் 8,9 ,10 மூன்று நாட்கள் 60;மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டம். ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பங்கேற்க உள்ளனர்.