தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ராமேஸ்வரத்தில் நில்த்திடி நீர் குறைந்து விட்டதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் உள்ளூர் மக்கள், இந்த பிரச்சினையை தீர்க்க உயர்அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வருத்ததுடன் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் பிரச்சினை குறித்து பேசிய உள்ளூர்வாசி ஒருவர், கோடை காலத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் ஒரு குடம் தண்ணீரை 5 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்” என்றார்.
தண்ணீர் பிரச்சினை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தேவையான தண்ணீரை சப்ளை செய்ய வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினை காரணமாக விவசாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயில் நெல் சாகுபடி கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.