தேர்தல் நேரத்தில் பைக்கில் கொண்டு செல்லப்பட்ட 10 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

சற்றுமுன்

பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடிபிடித்து வரும் நிலையில் பைக்கில் சென்றவர்களிடமிருந்து 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னாவிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதிபுரா என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது பைக்கில் வந்த இரு ஆண்களிடம் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (6.5 கோடி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் புர்னியா மாவட்டத்தை சேர்ந்த நந்த கிஷோர்(35), மற்றொருவர் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் குமார் (40) என தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒரு சிட்பண்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், அவற்றை இந்திய ரூபாயாக மாற்ற சென்றுக்கொண்டிருந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.