அஜித் நடிப்பில் இந்த வருடம் என்னை அறிந்தால் படம் வெளியானது. இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது ‘வேதாளம்’ படமும் இந்த வருடத்திலேயே வெளியாகிறது.
‘வேதாளம்’ படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல்தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே தினத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தூங்காவனம்’ படமும் வெளியாகவுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது. இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் ‘ஆழ்வார்’, ‘கிரீடம்’, ‘பில்லா’ ஆகிய 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியானது. அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு படமே அஜித் நடிப்பில் வெளியானது. தற்போது தான் அஜித் நடிப்பில் 2 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது



