அஜித்தின் வேதாளம் படம் ஒருபக்கம் வெளியானாலும் தீபாவளி தினம் விஜய்யின் புதிய படமான காக்கி படத்தின் போஸ்டர் வெளியாக
இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தப்படம் கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்கள். படஒளிப்பதிவை ஜார்ஜ் c.வில்லியம்ஸ் என்பதால் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை தெறிக்கவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பரவலாக கூறப்படுகிறது.
மேலும் இயக்குநர் மகேந்திரன், பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், நான் கடவுள் ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளமே காக்கி படத்தில் நடித்திருக்கிறார்கள். இளைய தளபதி விஜய் ரசிகர்கள் தீபாவளிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜா ராணி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த அட்லீயின் இயக்கம் என்பதால் படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் சரியாக இருக்கும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை என சொல்லப்படுகிறது.காக்கி படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான், ஆனால் விஜய் மேலும் ஒரு புது விதமான கெட்டப்பில் தோன்றுகிறாராம்.
அந்தபுது விதமான கெட்டப் ஸ்டைலான தாடியுடன் இருக்கும் கெட்டப்தானாம். ரசிகர்கள் அந்த கெட்டப்பை பார்த்தால் அதிர்ச்சி அடையும் வகையில் இருக்கு மாம்.இதுவரை விஜய்யை இவ்வளவு ஸ்டைலாக பார்த்திருக்க முடியாது என கூறுகிறார்கள் படக்குழுவினர். தீபாவளிக்கு விஜய்யின் புது விதமான கெட்டப்பில் காக்கி படத்தின் போஸ்டர் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


