குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முயற்சியால் கடந்த 5 ஆண்டுகளில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மேட்டூர் அணை திறப்பு தாமதமாவதால் குறுவைசாகுபடிக்கு தொகுப்பு திட்டம் இவ்வாண்டு அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



