பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எஸ்.வி.சேகர் மீதாக வழக்கில், வரும் 12ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆஜராகவி்ல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரபல நடிகரும், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான எஸ்வி.சேகர். தனது பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளர்களை பற்றி மிகவும் தரக்குறைவாக கருத்தை வெளியிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இவர் ஜாமீன் கோரி மனு செய்ததும், பின்னர் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



