உச்சினிமாகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன்

02 June24 Uijjani kaliamman - 2026திருநெல்வேலி நகரம் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது.

ஸ்ரீ மத் பரசமய கோளரி நாத ஆதீனத்திற்கு உபட்ட இக் கோயிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த சனிக்கிழமை (ஜூன் 23) காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜையுடன் தொடங்குகியது காலை 9.30 மணிக்கு நவக்கிரக பூஜை, தனபூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடை பெற்றன. இன்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வேதபாராயணம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் வைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.