காராமணிக்குப்பத்தில் இன்று நடைபெற உள்ள தோப்புத் திருவிழாவில், கடலுார் பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் கிராமத்தில் 14ம் ஆண்டு வன உலா எனும் தோப்புத் திருவிழா ஆனி மாத பவுர்ணமியான இன்று நடக்கிறது.
இதனை முன்னிட்டு கடலுார் பாடலீஸ்வரரை எழுந்தருளச் செய்து திருவந்திபுரம், பில்லாலி வழியாக வீதியுலா சென்று காராமணிக்குப்பத்திற்கு காலை வந்தடைகிறார்.அங்கு, பாடலீஸ்வரர் தங்க வைக்கப்பட்டு, அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து பாடலீஸ்வரர், திருவந்திபுரம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.



