எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார்.
சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட அதனை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
ஜூலை 1 ம் தேதி முதல், 10 வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கீர்த்தனா முதலிடத்திலும், தருமபுரியை சேர்ந்த ராஜ் செந்தூர் அபிஷேக், சென்னையை சேர்ந்த பிரவீன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு 28,067 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் 25,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



