தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்றும், நாளையும் திண்டுக்கல்லில் தங்கி ஆய்வு செய்கிறார்.
திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலை விழாவில் பங்கேற்கும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்வாச் பாரத்’ பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
நாளை அரசு சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.இது குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் வினய், டி.ஆர்.ஓ., வேலு, சக்திவேல் எஸ்.பி., உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். தகுந்த பாதுகாப்பளிக்கவும், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



