பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடாலூர் – ஊத்தங்கால் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், கடையை மூடுமாறு, பொதுமக்கள் நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பாடாலூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடையை மட்டும் தங்களது எதிர்ப்பையும் மீறி திறப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.



