புது தில்லி: நாளை முதல் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது. அதற்கு மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப் பட்டுள்ளதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீட்டை கட்டாயமாக்க உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. இதை அடுத்து புதிய கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டு காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.5 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை கார் விலை உயருகிறது. அதே போல், இருசக்கர வாகனங்களின் விலையும் ரூ.1000 முதல் 13 ஆயிரம் வரை விலை உயருகிறது. வாகன இஞ்சின் சிசி ஆற்றலுக்கு ஏற்ப இந்த விலை உயர்வு இருக்கும்.




