உல்லாசமாக இருந்துவிட்டு இளம் பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை

கோவை மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, கொலை செய்த பட்டறை தொழிலாளி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மெட்டாலா கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 30. பட்டறை தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

அவர் கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் வேலை செய்து வந்தார். இதனால் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

அந்த வீட்டில் ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதைத் தொடர்ந்து, செல்வராஜ் தலைமறைவாகி விட்டார்.

அரைநிர்வாணமாகவும் ,உடல் அழுகிய நிலையிலும், கொலை செய்யப்பட்டுக் கிடந்த அந்த இளம் பெண்ணைக் குறித்தும் கொலையாளியைக் குறித்தும் காவல்துறையினர் தீவர விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர் செல்வராஜூவுடன், ஒரு இளம் பெண் இருப்பதை வீட்டு உரிமையாளரின் மகன் விஜய் பார்த்ததாகக் கூறினார்.

அதனால் செல்வராஜ்தான் அந்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் கருதினர். இதனால் தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில், கரூரில் செல்வராஜ்பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை காவலர்கள் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் 25 வயதுடைய சத்யா என்பதும் தேனியை சேர்ந்தவர் என்றும், அவர் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள காப்பகத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

கொலை செய்ததை ஒப்புக்கொண்ட செல்வராஜை காவல்துறையினரிடம் அளித்துள்ள பாபரப்பு வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது :-.

எனது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு மிஸ்டுகால் வந்தது. அதன் பின்னர் நான் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

எதிர்முனையில் ஒரு பெண் பேசினார். அதனால் நான் பேச்சை தொடர்ந்தேன். அப்போது அவர், தனது பெயர் சத்யா என்றும், அரக்கோணத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் வேலை செய்வதாகவும் கூறினார்.

மிஸ்டுகால் மூலம் பேச தொடங்கிய நாங்கள் மணிக்கணக்கில் பேசுவோம். ஆனால் எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது என்பதை அவரிடம் மறைத்து விட்டேன்.

இதனை தொடர்ந்து சத்யாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு அழைத்தேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தீபாவளிக்கு மறுநாள் கோவை வந்தார்.

போனில் பேசும்போது தேன் குரலாக பேசிய சத்யா நேரில் பார்த்தபோது அழகாக இல்லையே என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இருந்தாலும் தவிர்க்க முடியாமல் சத்யாவை அழைத்து கொண்டு கோவையில் பல இடங்களுக்குச் சென்று சுற்றிக் காண்பித்தேன்.

பின்னர் நான் தங்கி இருந்த வீட்டுக்கு சத்யாவை அழைத்து வந்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். இந்நிலையில் எனக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதை சத்யாவிடம் கூறினேன்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சத்யா நீங்கள் எனக்கு மட்டும்தான் சொந்தம், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், தன்னுடன் உல்லாசமாக இருந்ததை எனது குடும்பத்தினரிடம் அம்பலப்படுத்துவேன்.

மேலும் காவல்துறையினரிடம் புகார் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சத்யாவை கீழே தள்ளிவிட்டு, அருகில் கிடந்த சுத்தியலால் அவரது மார்பில் ஓங்கி அடித்தேன்.

பின்னர் சத்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினேன். தற்போது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் செல்வராஜ் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.