பிரதமர் மோடியை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

 

பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து புதுடெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.

நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை குறித்து எவ்வித கருத்தும் மோடி தெரிவிக்காததால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்றார்.

ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மக்களிடையே சகிப்பின்மையை உருவாக்கி வருகின்றனர். மேலும், அவர்களில் பலர் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்.

அஸ்ஸாம் மாநில ஆளுநர் இந்தியா இந்துக்களுக்கே, முஸ்லீம்கள் பாகிஸ்தான் அல்லது சிரியாவுக்கு சென்றுவிடுங்கள் என்கிறார். அவர்கள் அனைவரும் இந்தியா ஒர் ஒற்றுமையான நாடு என்பதை மறந்துவிட்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் கவனம் தேநீரிலிருந்து தற்போது மாடுகளுக்கு மாறிவிட்டது என்ற சிந்தியா, பிரதமர் மோடி இதுவிஷயத்தில் மௌனமாகவே இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை காவல் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து கலைத்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.