தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் : மத்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் நிலை இருப்பதால், தற்போதைய சூழ்நிலையில் நிலைமை சற்று கவலையளிப்பதாக உள்ளது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

இது குறித்து மத்திய வானிலை துறையின் பொது இயக்குனர் எல்.எஸ்.ரத்தோர் தெரிவித்துள்ளதாவது : –

தென்னிந்தியாவின் கடலோர பகுதிகளில், குறிப்பாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதன்பிறகு மழையின் அளவு குறைந்தாலும் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் வேலூரில் வழக்கத்தை விட 139 சதவீதமும், சென்னையில் 89 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

தென் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நிலைமை சற்று கவலை அளிப்பதாக உள்ளது என மத்திய வானிலை ஆய்வு மைய பொதுஇயக்குனர் எல்.எஸ்.ரத்தோர் தெரிவித்துள்ளார்.