தலைமறைவான சுயநல அரசியல் வாதிகள் :  குமுறும்  தமிழக பொதுமக்கள்

சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏறத்தாழ நூறாண்டு காலத்தில் கண்டிராத கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த  வெள்ளத்தால்  269 பேர் உயிரிழந்துள்ள தாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். 

மேலும்  மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு சென்னை நகரம் ஒரு தீவாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.

 நிலைமை மிக அபாயகரமான சூழ்நிலையில் உள்ளது. சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளதால், நிவாரண பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தொலைதொடர்பு வசதிகளைப் பொறுத்தவரை தரைவழி தொலைபேசி இணைப்புகள் 60 சதவீதம் வரையும், 40 சதவீதம் அளவுக்கு செல்போன் சேவைகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன என்றும் ராஜ்நாத் சிங் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில்  பெருத்த சேதத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து, உண்ண உணவின்றித் தவித்து வருகிறார்கள். பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நிலையே தற்போது நிலவுகிறது.

இந்த நிலை  ஏற்பட்டதிற்கு முக்கிய காரணமே பொதுநல நோக்கம்  இன்றி  லஞ்சம் பெற்றும்  ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல்  கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந் து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி  கொள்ளையர்களே என பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.

 அரசியல்வாதிகள் பதவி அதிகாரத்தை  துஷ்பிரயோகம் செய்து பணத்தை கொள்ளை அடித்து சொத்து  சேர்க்க செய்த அட்டகாசத்தில் ஒன்றுதான் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு. தண்ணீர் செல்லும்  பாதைகளையெல்லாம் அடைத்தும், குளங்கள், கண்மாய்களையெல்லாம் அழித்தும் பெரும் பணம் கொண்ட கூட்டத்திடம் வசூல் வேட்டை நடத்தி அந்த இடத்தை  குடியிருப்பு பகுதிகளாக ஆக்க அரசாங்கத்தை ஆண்ட அதிகார வர்க்கத்தினர் அனுமதி அளித்தது முதல் தவறு. இதை விட பெரிய கொடுமை அரசாங்கமே கண்மாய்களையெல்லாம் குடியிருப்பு பகுதிகளாக ஆக்கி பொதுமக்களிடம்  விற்றது. 

தண்ணீர் செல்லும் பாதைகளையெல்லாம் ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடும் மழையால் ஏற்பட்ட பெருத்த  வெள்ள விபத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து, உடைமைகளை இழந்து வருவதையும்  269 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் உயிர் பலி யையு ம் தவிர்த்து  இருக்க முடியு ம்.

 மேலும்  தண்ணீர் செல் லும், தேங்கும் இடங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு  இன்று குய்யோ முறையோ என்று இயற்கையின்மீது   குறைசொல்வது என்ன நியாயம்? மேலும் மிகவும் திறமை வாய்ந்த பெரும்பாலான எழுத்தாளர்கள் மற்றும் பல ஊடக நிர்வாக ங்களும் பொதுநல நோக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் கொள்ளையடிக்க சுற்றி திரியும் அரசியல்வாதி களுக்கு  ஆ தரவாக  அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு  கரைவேட்டி கொள்ளையர்களின் புகழை ஊடகங்களின் வாயிலாக பரப்பி வருவதாகவும் பலரால் கூறப்படுகிறது.

 மேலும் தற்போது மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்தது யார் என்றால் ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து கொண்டு சென்று இலவசமாக வழங்கி சேவை வருகின்றனர்.

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தமிழக அரசாங்கமும் அரசியல் கட்சியினரும் எந்த உதவியும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச் சாட்டு. தற்போதுள்ள ஆளும் கட்சியை சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெயர் அளவில் பொதுமக்களுக்கு உதவி செய்வதாக கூறி ஊடகங்கள் வாயிலாக தலையை காட்டிவிட்டு அவர்களும் தலைமறைவு ஆகிவிட்டனர். மேலும் முதன்முதலில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகு மூலம் காக்க முயற்சி செய்ததும் தனியார் அமைப்புதான்.

வானிலை ஆராய்ச்சி மையம் அடிக்கடி கனமமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசிடம் உடனடியாக ராணுவ உதவியை கேட்க அரசாங்கம் தயக்கம் காட்டியது ஏன்? மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்கம் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றக் கூட முடியாதா? பேரிடர் படையினர் முன்கூட்டியே வருகை தந்து இருந்தால் மழை நின்ற மூன்று நாட்களில் நடைபெற்ற சில அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கும். தற்போது கூட பேரிடர் ராணுவ படையினர் கொண்டு வந்த உணவு பொருட்களைத்தான் ஹெலிகாப்டர் மூலம் கொடுத்துள்ளது. அதிகமான மழை காலங்களில் மின்சார இணைப்பைக்கூட துண்டிக்க உத்தரவிடாமல் அரசு மெத்தனமாக செயல் பட்டதால் தமிழக மக்களை பலி கொடுத்ததுதான் மிச்சம் என்றும்  மக்களால் பரவலாக பேசப்படுகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்துகூட வந்து தேர்தல் நேரத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் வாக்குகளை பெற தமிழகத்தில் சுற்றி திரிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் தற்போது எங்கே போனார்கள்? வாக்குகளை பெற சுற்றி திரியும் அரசியல் கட்சியினர் அனைவரும் தற்போது வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்து இடங்களிலும் முகாமிட்டு சேவை செய்வதுதானே?  ஏன் கரைவேட்டிகள் தலைமறைவு ஆக வேண்டும் என்கிற சர்ச்சை  குமுறல் தமிழகத்தில்  ஒலிக்க  கிளம்பியுள்ளது.

எது எப்படியோ தமிழகத்தில்  கனிம வளங்களை  தோண்டி நடைபெறும் முறைகேடுகளை கண்டும்  காணாமலும் அரசாங்கம்  இருந்தது போல் தண்ணீர் செல் லும், தேங்கும் இடங்களையெல்லாம் முறையாக  பராமரிக்கா ததால் இயற்கை தற்போது ஒரு  சரியான  பாடத்தை தமிழக  மக்களுக்கு புகட்டியுள்ளது.

பொதுவாக தமிழகத்தில்  மழை வெள்ளத்தால்  ஏற்ப்பட்ட கொடூர பாதிப்புகளுக்கு முக்கிய  காரணம் பெரும்பாலான தமிழக பொதுமக்கள் தான். 

இனியாவது நமது இளய தலைமுறை வாழ்க்கையை கருத்தில் கொண்டு முதலில் அரசியல்வாதி கொள்ளையர்கள் தேர்தல் நேரத்தில் விடுக்கும் இலவச அரசாங்க திட்டங்க ளையும் வாக்களிக்க கொடுக்கும் லஞ்சங்களுக்கு    ஆசைப்படாமல்  பொதுமக்கள் அனைவரும் நிராகரித்து ஒழித்துகட்டி நேர்மையானவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்தால் மட்டுமே நாடு உருப்படும்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.