ஏப்ரல் 10, 2021, 4:48 மணி சனிக்கிழமை
More

  கண்கள் தீடிரென்று சிவந்து உள்ளதா?

  eye - 1

  கண்கள் மிகவும் மென்மையானவை, கண்களை சுற்றி 12 தசைகள் இயங்குகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண்நோய் வருகிறது.

  இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது.

  ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். தொடர்ந்து தொலைக்காட்சி, சினிமா பார்த்தால் கண்கள் சோர்வடையும், கண்களில் வலி இருக்கும், இமைகள் கனமாக இருக்கும், தலைவலியும் வரும்.

  மேலும் தொடர்ந்து படிக்கும் போது கண் மங்கலாக தோன்றும். நீண்ட நேரம் இரவில் விழித்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண் பாதிப்பு ஏற்படும்.

  இதனால் கண்ணின் கருவிழி மற்றும் ஜவ்வு, கண் இமைகளின் உட்பகுதி விளிம்பு ஆகியவற்றில் சிலநோய் அறிகுறிகள் தென்படும்.

  கண் சிவத்தல், கண்ணில் தூசு விழுந்தது போன்ற உறுத்தல், இமைகள் வீங்குதல், கண் கூசுதல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஏற்படலாம்.

  சிலருக்கு கண்கள் எப்போதுமே சிவப்பாக காணப்படும். மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக ரத்தக் குழாய்கள் விரிவடையும்.

  அதே போன்று கண்ணின் வெண்விழி ஜவ்விலும் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சிவப்பாக தோன்றும். ரத்தத்தில் ஆல்கஹால் அளவு குறைந்தால் கண்கள் வெண்மை நிறத்துக்கு மாறிவிடும்.

  மதுப்பழக்கம் இல்லாத சிலருக்கும் ரத்தக்குழாய் தடிமனால் கண்கள் சிவப்பாக தோன்றலாம். இதனை குளிர்க்கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம்.

  கண் சிவந்து வலியும் இருந்தால் கண்ணில் புண் அல்லது கண் நீர் அழுத்தம் காரணமாக இருக்கலாம். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

  வெண்விழியில் உள்ள ஜவ்வில் வைரஸ், பாக்டீரியா தொற்று, அலர்ஜி மற்றும் கண்கள் உலர்ந்து போதல், ரசாயன பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை, தூசு விழுதல் ஆகிய காரணங்களாலும் கண்கள் வீங்கி சிவப்பாக மாற வாய்ப்புள்ளது.

  எனவே கண்ணில் சிறிய பிரச்னை இருந்தாலும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமருத்துவம் செய்வது தவறாகும்.

  இருசக்கர வாகனத்தில் கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணணி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல், கண்நோய் மற்றும் டென்ஷன் காரணமாகவும் கண்ணில் நீர்வடியும்.

  இதில் இரண்டு வகை உண்டு. கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு ஆகியவற்றால் ஏற்படுவது ஒருவகை. இன்னொரு காரணம் எபிபோரா. கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் கண்ணில் நீர்வடியும்.

  இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனடி சிகிச்சையின் மூலம் பார்வை இழத்தல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கண் மருத்துவ நிபுணர்கள்.

  வெளிப்புற எரிச்சலூட்டும் பொருட்கள்: பூச்சிகளின் நுழைவு,

  படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் கண்களில் ஒரு வலுவான காற்று வீசியிருந்தால் அல்லது சளி சவ்வுகளில் தூசி விழுந்தால், காலையில் நீங்கள் சிவந்த கண்களால் எழுந்திருக்கலாம்;

  கணினிக்கு முன்னால் நீடித்த கடினமான வேலை மற்றும் மோசமான வெளிச்சத்தில் பகலில் நீடித்த வாசிப்பு;

  அழகுசாதனப் பொருட்கள் கண்களுக்குள் வரும்போது கிரீம் அல்லது பிற அழகு சாதனங்களை தவறாகப் பயன்படுத்துதல்;

  காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்துகொள்வது (நீங்கள் காலையிலும் பிற்பகலிலும் மட்டுமே லென்ஸ்கள் அணிந்தாலும், எப்போதும் இரவில் அவற்றை கழற்றினாலும், தயாரிப்புகளை அணிந்துகொள்வது மற்றும் பராமரிப்பது போன்ற விதிகளை நீங்கள் பின்பற்றாவிட்டால் அவை சிவந்து போகும்);

  தூங்குவதற்கு முன் நீண்ட அழுகை.

  எல்லா பெண்களும் தங்கள் ஒப்பனை முழுவதுமாக கழுவிவிட்டு படுக்கைக்குச் செல்வதில்லை. மீதமுள்ள ஒப்பனை சளி சவ்வை எரிச்சலூட்டுகிறது, இதன் விளைவாக சிவத்தல் ஏற்படுகிறது.

  எப்போது ஒரு மனிதனின் கண்களில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு போதுமான அளவு கண்ணீர் சுரக்கவில்லையோ, அப்போது கண் வறட்சி பிரச்சனை ஏற்படக்கூடும். போதுமான ஈரப்பதம் இல்லாமல் கண்களில் எரிச்சல் உணர்வும், கண்களின் இரத்த நாளங்கள் விரிந்தும் காணப்படும். எரிச்சல், அரிப்பு, குடைச்சல் மற்றும் உணர்ச்சி குறைவு போன்றவை, வறண்ட கண்களின் பொதுவான அறிகுறிகளாகும். இதற்கு தீர்வு உங்கள் மருத்துவரை அணுகுவது தான். மருத்துவர் கூறும் சிறப்பு கண் சொட்டு மருந்தை கண்களுக்கு போடுவதன் மூலம் வீக்கம் குறைந்து, கண்களின் வறட்சியும் குறைந்துவிடும்.

  சிவந்த கண்கள், பொதுவாக கண்களில் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்துவதோடு, கண்களில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்திடும்.

  இளஞ்சிவப்பு கண்கள் அல்லது வெண்படலம் என்பது வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒவ்வாமை அல்லது கண்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் உணர்வால் ஏற்படக்கூடியது. கண்களை ஏதாவது எரிச்சலூட்டும் போது தான் கண் சிவந்துவிடுகிறது. கண்களின் இமைகளை சுற்றிலும் மஞ்சள் நிறத்தில் ஏற்படக்கூடிய வெளியேற்றம், வெள்ளை நிற வெளியேற்றம், அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான கண்ணீர் அல்லது கண் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். பிற கண் பிரச்சனைகளுக்கு இதே அறிகுறிகள் தான் இருக்கும். எனவே, இதற்கு தீர்வு காண மருத்துவரை அணுகுங்கள். இந்த இளஞ்சிவப்பு கண் பிரச்சனை என்பது சில வாரங்களில் சரியாகி விடும். ஆனால், சில ஆன்டிபயாடிக் இதனை விரைந்து சரிசெய்ய உதவும். அதற்கு நீங்கள் மருத்துவரை அணுகி தான் ஆக வேண்டும்.

  கண் இமை வீக்கம் அல்லது கண் இமை அழற்சியானது ஒருவரது கண்களை சிவக்க செய்வதோடு, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும். பாக்டீரிய தொற்று, அழகு சாதனப் பொருட்கள் தெரியாமல் கண்களில் படுவது அல்லது கண் இமைகளில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் அடைப்பு போன்றவை தான் கண் இமை அழற்சிக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. சுடுநீர் கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலமும், கண் இமை சுரப்பிகளில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுவதன் மூலமும் கண்களில் வீக்கத்தை சரி செய்திடலாம். இவற்றை செய்தும் சரியாகவில்லை என்றால், உடனே கண் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

  எப்போது ஒரு விஷயத்தில் முழு சிந்தனையையும் செலுத்தி ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்களோ, அவர்கள் அது போன்ற தருணங்களில் கண் சிமிட்டுவதற்கு மறந்து விடுகிறார்கள். இப்படி கண் சிமிட்டாமல் இருப்பதால் கண்களில் அழுத்தம் அதிகரித்து, எரிச்சலை ஏற்படுத்துவதோடு, கண்களின் இரத்த நாளங்களை விரிவடைய செய்திடுவதால் கண்கள் சிவந்து காணப்படுகின்றன. இது போன்ற பிரச்சனை ஏற்படாமல் தவிர்த்திட வேண்டுமென்றால், எப்படிப்பட்ட விஷயத்தில் கவனத்தை செலுத்தினாலும் கண் சிமிட்டுவதற்கு மட்டும் மறந்து விடக்கூடாது. எப்போதும், 20-20-20 விதியை பின்பற்ற பழகிக் கொள்ளுங்கள். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒன்றை, குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்காவது பார்க்க வேண்டும்.

  பாதுகாப்பு முறை
  குறிப்பிட்ட இடைவெளியில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் பிரச்னைகளை துவக்கத்தில் கண்டறிந்து சரி செய்யலாம்.

  நாள்பட்ட சர்க்கரை மற்றும் மிகை ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் நோயை கட்டுக்குள் வைப்பது அவசியம்.

  கண்ணில் ஏற்படும் நோய் தொற்று அறிகுறிகளை உடனே அறிவதும் முக்கியம். திடீர் பார்வையிழப்பு, தெளிவற்ற பார்வை, கண்களில் ஒளி வீசுதல், கறுப்புப் புள்ளிகளின் தோற்றம் போன்றவை கண் அழுத்த நோய் அல்லது மூளை பாதிப்பின் விளைவாக இருக்க வாய்ப்புள்ளது.

  சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணியலாம். வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

  சரியான கண்ணாடியை அணிவதன் மூலம் பார்வை திறனை சரி செய்து கொள்ளலாம். குறைந்த வெளிச்சத்தில் படிப்பதை தவிர்க்கவும்.

  கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண்களை மூடிய நிலையில் 10 நிமிடத்துக்கு சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.

  சிவந்த கண்கள் பிரச்னை உள்ளவர்கள் வெந்நீரில் துணியை நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கலாம்.

  கண்களில் செயற்கை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

  தலையணை உறையை தினமும் மாற்றவும். இது போன்ற நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கண் நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  13 + 2 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  432FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »