சென்னை மியாட் மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலி

 
சென்னை மாநகரில் உள்ள மணப்பாக்கத்தில் இயங்கி வரும் மியாட்’ மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலியாகி உள்ளனர். அங்கு தினந்தோறும் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தனர்.
 
சென்னை மாநகரில் தொடர் மழை காரணமாக பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,ஜெனரேட்டர் உதவியின் மூலம் மருத்துவமனை இயக்கப்பட்டு வந்ததால், செயற்கை சுவாசம் பெறும் நோயாளிகள் எவ்வித சிரமமின்றி சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கனமழை பெய்ததால் நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்குள் மழைநீர் ஜெனரேட்டர் அறையிலும் மழைநீர் சூழ்ந்ததால்ஜெனரேட்டர் பழுதாகி நின்றது.
 
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க பயன்பட்டு வரும் அனைத்து மின்சாதன உபகரணங்களும் செயல்படதால் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அடுத்தடுத்து நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழந்தனர்.
இன்று காலை வரை சுவாசிக்க முடியாமல் 18 நோயாளிகள் இறந்தனர்.
 
மியாட் மருத்துவமனையில் பலியான 15 பேரின் உடல்கள் இன்று காலை 11 மணி முதல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. 15 பேரின் உடல்களும் ராயப்பேட்டைஅரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டன.இறந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் பிரேத பரிசோதனை கூடத்தின் வெளியே கூடி இருந்தனர்.
 
அவசர தேவையை கருத்தில்கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.