கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்பேட்டை டி.ஆர் மில் தகன மையத்தில் ஹவுஸ் புல் போர்டு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு பக்கம் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
மத்திய, மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் மே 1ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு ஆன தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்பதிவு காலம் தொடங்கி பலர் தங்களுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,733 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 217 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று(மே.1) சாம்ராஜ்பேட்டையிலுள்ள டி.ஆர் மில் தகன மையத்திற்கு ஒரே நேரத்தில் 45 சடலங்கள் வந்துள்ளன. அங்கு, 20 சடலங்கள் தகனம் செய்வதற்கு மட்டுமே முடியும். இதுமட்டுமின்றி, மேலும் 19 சடலங்கள் தகனம் செய்திட முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தகனம் செய்யும் மைதானத்தின் வாசல் முன்பு இங்கு எரிக்க இடமில்லை என்கின்ற அந்த வாசகத்துடன் கூடிய அட்டையை மாட்டி உள்ளனர்.
இந்தப் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே பீன்யாவில் உள்ள எஸ்ஆர்எஸ் தகன மையத்தின் வெளியே 11 ஆம்புலன்ஸ்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்த காணொலி வெளியாகியிருந்தது.
தகன மையங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 40 சடலங்கள் மட்டுமே அங்கு தகனம் செய்யப்படுவதாகக் கூறுகின்றனர்.