லேசான கோவிட் -19 அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளால், சி.டி ஸ்கேன் மற்றும் பயோமார்க்ஸர்கள் தவறாகப் பயன்படுத்டப் படுவதாக எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்! சி.டி ஸ்கேன்களின் அதிகப்படியான பயன்பாடு கதிர்வீச்சின் வெளிப்பாட்டை அதிகரிக்கிறது, இதனால் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என்று அவர் எச்சரித்திருக்கிறார்.
“லேசான தொற்றுக்கு சி.டி ஸ்கேன் எடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை; ஒருவர் அறிகுறி அற்றவராக இருந்தாலும் எளிதில் குணமடையக்கூடும் என்றாலும், சி.டி. ஸ்கேனில் சில திட்டுக்களைக் காணலாம் . ஒரு சி.டி.ஸ்கேன் எடுப்பது என்பது, 300-400 மார்பு எக்ஸ்-கதிர்களை தாங்குவதற்கு சமம். கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் தரவுகள், அடிக்கடி சி.டி ஸ்கேன் காரணமாக, குறிப்பாக இளம் வயதிலேயே சிடி ஸ்கேன் எடுப்பதால், பிற்கால வாழ்க்கையில் புற்றுநோயின் அபாயத்தை அது அதிகரித்துள்ளதாகக் காட்டுகிறது என டாக்டர் ரண்தீப் குலேரியா எச்சரித்தார்.
நோயறிதலின் தவறான பயன்பாடு குறித்து, ரந்தீப் குலேரியா குறிப்பிட்டபோது… லேசான அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் தேவையில்லை. “நிறைய பேர் சி.டி. ஸ்கேன் செய்து வருகிறார்கள், மேலும் அவர்களின் கோவிட் சோதனைகள் பாசிட்டிவ்வாக மாறினால் சி.டி ஸ்கேன் செய்வது முக்கியம் என்று கருதுகின்றனர்!” என்றார்.
சி.டி. ஸ்கேனில் 30-40 சதவிகித அறிகுறியற்ற கோவிட் -19 நோயாளிகளில் திட்டுகள் இருப்பதைக் காட்டிய ஓர் ஆய்வை அவர் மேற்கோள் காட்டினார்! இது எந்த சிகிச்சையும் இல்லாமல் அழிக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், லேசான நோய்த்தொற்று ஏற்பட்டால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வீட்டின் தனிமைப்படுத்தலின் மூலமே சரியாகிவிடலாம். சி.டி ஸ்கேன் பயன்படுத்தப்படுவதில் சில திட்டுகள் தெரியக் கூடும்… என்றார் அவர்.
மேலும், சிஆர்பி, டி-டைமர், எல்.டி.எச், ஃபெரிடின் போன்ற பயோமார்க்கர்களாலும், லேசான அறிகுறிகள் மற்றும் சாதாரண செறிவூட்டல் நிலைகளில் எந்த பயனும் இல்லை, ஏனெனில் இது ஒருவருக்கு பீதி அளிப்பதுடன், எதிர்வினைகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது.
பயோமார்க்ஸ்களை தேவையற்ற முறையில் நம்பியிருப்பது அதிகப்படியான சிகிச்சையில் போய் முடிவடையும்! இது உடலை மோசமாக பாதிக்கும். “உங்களுக்கு மிதமான நோய் இருக்கும்போது மற்றும் உங்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயோமார்க்ஸ் செய்யுங்கள்” என்று ரந்தீப் குலேரியா பரிந்துரைத்தார்.