தமிழகத்தில் கொரோனா பணி ஒப்பந்த செவிலியர்கள் 1,212 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டதது.
அதனால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அவர்களுடைய பணி காலம் வருகிற மே 5-ம் தேதி முடிவடையவுள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், 2015-16-ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பதிவு செய்தவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்குச் சென்னையில் கொரோனா வார்டுகளில் பணி அமர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவிலியர்கள் வரும் 10ம் தேதிக்குள் மருத்துவக்கல்வி இயக்குநர் முன் பணியில் சேரவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.