92,476 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தமிழகத்தில் பாதிப்பு : ஜெயலலிதா ஆளுநரிடம் விளக்கம்

 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேதங்கள் குறித்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் ரோசய்யாவின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் 3 ஆயிரத்து 548 வருவாய் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 ஆயிர்தது 394 குடிசை வீடுகளும், 92 ஆயிரத்து 476 ஹெக்டேர் விவசாய நிலங்களும் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்குச் சொந்தமான 14 ஆயிரத்து 410 கிலோமீட்டர் நீளச் சாலைகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் மின்சார இணைப்புகளும், மின்பகிர்மான கருவிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் தெரிவித்துள்ளதாக ரமேஷ் சந்த் மீனா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .