கை கொடுத்த சேவா பாரதி தொண்டர்கள்: பேஸ்புக்கில் பெண் உருக்கம்


சென்னை:
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டர்கள், தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் என பலர் தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். பல இடங்களில் உணவு கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது, தவிப்பவர்களை மீட்டு வந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது என உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது சேவாபாரதி மூலம் பல்வேறு இடங்களில் உதவிகளைச் செய்து வருகிறது.
இது குறித்து தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஒரு பெண்மணி….

கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறேன்..!!!
இன்று பிரசவ வேதனையில் துடித்த பெண் எமனிடம் சென்று திரும்ப வந்ததாகத்தான் நான் நினைக்கிறேன், இது வரை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சொன்னது போல கையில் சூலாயுதத்தோடும், காவி அடையாளத்துடனும் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் இல்லை. எங்கள் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எங்களுக்கு கடவுளின் பிள்ளைகளாகவே தெரிந்தார்கள். எங்களை இதுவரை ஏமாற்றிய TNTJ, தமுமுக, SDPI இயக்கத்தினர் வெள்ளம்பாதித்த பகுதியில் காணவில்லை, ஆனால் அவர்கள் கெட்டவர்கள் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தான் இரவு பகல் பாராமல் அவர்கள் குடும்பத்தார்கள் பாதித்ததை போன்று அக்கரையுடன் உதவுகிறார்கள்.
ராணுவம், போலிஸ் செல்ல தயங்கிய பகுதிகளுக்கு கூட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பயப்படாமல் போகிறார்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாக மீட்பது, இறந்த சடலத்தை தூக்குவது, உணவுதயாரித்து விநியோகம் செய்வது.
கடவுளே ஆண்கள் மட்டுமா ஆர்.எஸ்.எஸ் பெண்களும் மீட்புபணியில், வெட்கி தலைகுனிந்தேன், இளகிய மணம் படைத்த இவர்களையா காவி தீவிரவாதிகள் என்று இஸ்லாமியர்கள் சொன்னதை நம்பினேன். இன்று தங்கி இருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மானசீகமாய் கடவுள் பெருமாளிடம் மண்ணிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் ‪#‎கடவுளே‬
அமீனா பீவி, திருவல்லிக்கேணி