இளைஞர்களே, அரசியல் என்னும் சாக்கடையை சுத்தம் செய்ய புறப்படுங்கள் : ஒரு இளைஞனின் வேகம்

 
அதிகார வ(ர்)க்கத்த அரசியல்வாதிகள் மீது வெறுப்படைந்த தமிழக மாணவர்கள் நேர்மையான அரசாங்க ( அரசு பணி ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள) அதிகாரிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மாணவர்கள் மற்றும் பெரும்பாலான பொதுமக்கள் திட்டம் போட்டு வருகின்றனர் .
 
பொது மக்களுக்கு இளைஞர்கள் சேவையாற்ற முன்வரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகனூலில் “Need A Change – 2016” எனும் சமூக பக்கத்தை கடந்த சில நாட்களுக்கு முன் எவரோ ஒருவர் உருவாக்கியுள்ளார்.
 
அந்த முகநூல் சமூகப் பக்கத்தை இதுவரை 19500க்கும் மேற்பட்டோர் விரும்பியுள்ளனர்.மேலும் “Need A Change – 2016” எனும் முகனூல் பக்கத்த்தில் இளைஞர்களை ஊக்கபடுத்தும் இளைஞர்கள் மற்றும் பலர் பதிகளை பதிவிவிட்டும் வருகின்றனர் .பெரும்பாலானோர் அரசாங்கம், அரசியல்வாதிகள், பல அரசு அதிகாரிகள், ஊடகங்கள், திரைப்பட நடிகர்கள் ஆகியோர்மீது
பெருத்த கோபம் கொண்டு பதிவுகளைப் பதிவிடுகிறார்கள்.
 
இந்த நிலை ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமே பொதுநல நோக்கம் இன்றி லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும், பொதுமக்களின் வரிப் பணத்தை அரசாங்க பொதுநல திட்டங்களுக்கு முறையாக செலவிடாமல் கொள்ளையடித்து சொத்து சேர்க்கும் பேராசையில் தொடர்ந்து சுற்றி திரிந்து வரும் சுயநல அரசியல்வாதி கரைவேட்டி கொள்ளையர்களே, என்றும் அவர்களூக்கு முக்கியமாக பெரும்பாலான ஊடகங்கள் ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகிறது.
 
“Need A Change – 2016” எனும் முகனூல் பக்கத்தில் பெரும்பாலோனரை இணைக்க கிருஷ்ணபிரசாத் எனும் இளைஞன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது :-
 
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் எந்த கட்சிக்கு உங்கள் ஆதரவு என்றால், திமுக, அதிமுக இரண்டில் ஏதேனும் ஒன்றையே பெரும்பாலானோர் கூறுவார்கள்.ஆனால் சமூக ஊடகங்களில் குழுக்களில் பதிவிடப்படும் பதிவுகளின்படி தமிழகத்தை அடுத்து யார் ஆட்சி செய்ய வர வேண்டும் என்ற பதிவுகளைப் பார்த்தால் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக, அதிமுக இருவருமே வேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள்.
 
தமிழ்நாடு உள்ள சூழ்நிலையில், தமிழர்களின் பிரதான எதிரிகள் திராவிட கட்சிகள். சட்டத்தை மதிக்காமல் ஆக்கிரமிப்பு செய்தவர்கள், உங்களைப் போன்ற மத வெறியர்களுக்கு புத்தி புகட்டத்தான் இறைவன் இத்தகைய ஒரு சோதனையைக் கொடுத்துள்ளான். நீங்கள் எல்லாம் திருந்துவீர்களா இல்லையா என்பதை பார்க்கத்தான் அந்த இறைவன் உங்கள் உடலில் இன்னும் உயிரை விட்டு வைத்து உள்ளான். எல்லாம் வல்ல பரமேஸ்வரன் நினைத்தால் ஒரு நொடி போதும். உங்கள் அனைவரின் உயிர்களையும் எடுக்க.
 
திமுக, அதிமுக இரண்டுமே கூட்டு களவாணிகள், கோக்கு, மாக்கில் பல நுறு Phdகள் வாங்கக்கூடிய திறமையான கட்சிகள். ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று குற்றம் சொல்லியும், மாறி மாறி கட்சியின் தலைவர்கள் தான் மட்டும்தான் யோக்கியம் என்பதைப் போல் பேசி வருவதாக பரவலாக பேசப்படுகிறது.இன்று மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு காரணம், இன்றைய அரசாங்கம்தான். அதற்கு திமுகவையும் ஏன் விமர்சிக்கிறாய். வெறும் அதிமுகவை மட்டும் விமர்சித்தால் உன்னை திமுககாரன் என்று பிறர் சொல்லி விடுவார்கள். உனது நடுநிலை வேடம் களைந்து விடும் என்று பயமா என்று திமுகவினர் பலர் கேட்கிறார்கள். அனைவருக்குமான பதில்.
 
திமுக, அதிமுக இருவர் ஆட்சியிலுமே எரி, குளங்கள் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. சமீபத்தில் போரூர் ஏரியை அதிமுக ஆக்ரமிக்க முயற்சி செய்தது. அது தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தடுக்கப்பட்டது. ஆனால் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை தடுக்கப்படவில்லை. தடுக்க பலர் நினைத்தும் முடியவில்லை. காரணம் மணல் கொள்ளையர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஆளும் கட்சிக்கு ஒரு பங்கு. பிரச்னை செய்யாமல், சட்டசபையில் கேள்வி கேட்காமல், அறிக்கை விடாமல் இருக்க எதிர் கட்சிக்கு ஒரு பங்கு என்று கப்பம் கட்டி பல ஆண்டுகளாக கொள்ளை அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த கொள்ளையர்களில் அரசியல் பதவிகளில் இருப்பவர்களும் அடக்கம்.
 
வேளச்சேரியில் உள்ள ஏரிகளை எல்லாம் ஸ்வாகா செய்தது யார்? வேளச்சேரி பகுதியில் மொத்தம் 69 ஏரிகள் இருந்ததாகவும், இவை குறிப்பிட்ட காலகட்டமான 2005 – 2011ம் ஆண்டு காலகட்டத்தில் காணாமல் போயுள்ளதாகவும் தமிழக பொதுப்பணித் துறை, பத்திரப்பதிவுத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிடம் கட்ட வேளச்சேரி உகந்த இடம் அல்ல என்பது தெரிந்தும் 2007ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ஆக்கிரமிப்பு பகுதிகளில் பல கட்டிடங்கள் கட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
 
அதிலும் 2009 முதல் 2011ம் ஆண்டு காலகட்டத்தில் மிக அதிகமாக அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும்
செம்பரம்பாக்கம் ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் உலக வங்கியிடமிருந்து ரூ.600 கோடி கடனாக சென்ற திமுக அரசு பெற்றது. அதை செய்ததா? இல்லை. அதுவும் ஸ்வாகா.
 
சென்ற திமுகவும் அதை செய்யவில்லை. இன்றைய அதிமுகவும் செய்யவில்லை. ஆக ஜெயா, கருணாநிதி இருவரும் கூட்டு களவாணிகளாக சேர்ந்துதான் இந்த தமிழ்நாட்டை நாசப்படுத்தி உள்ளனர்.
 
இப்போது புரிகிறதா? நான் ஏன் அதிமுகவை விமர்சிக்கும்பொழுது திமுகவையும் சேர்த்து விமர்சிக்கிறேன்
 
வெள்ள நிவாரணத்தில் மக்கள் பணி செய்த இளைஞர்களில் ஒரு பகுதியினர் அரசியலுக்கு வந்து மக்கள் பணியும் செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5, 6 மாதங்களில் வர இருக்கிறது. இந்த 6 மாதங்களில் ஊடகங்கள், கமல் போல் உண்டா என திடீர் என்று அந்தர்பல்டி அடிக்கலாம். எனவே ஊடகங்களை நாம் நம்பக் கூடாது .
 
சமூக ஊடகங்களை பயன்படுத்தி நாம் அனைவருமே தமிழக மக்கள் மனதில் இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் தீயை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டியது முதல் பணி. அந்த தீயை மேலும், மேலும் நாம் இந்த சமுதாய ஊடகங்கள் மூலம் அதிகரிக்க வேண்டும்.
 
நாட்டின் ஜனத் தொகையில் 60 சதவீதம் பேர், முகநூல் முதலான சமுதாய ஊடகங்களை பயன்படுத்துவோர். சமுதாய ஊடகங்களில் இல்லாத 40 சதவீத மக்களின் மனங்களில் எரியும் தீயை தூண்டி விட்டு, தூண்டிவிட்டு அதிகரிக்கும் வேலையை செய்ய வேண்டும்.காரணம, இந்த தீ சாதாரண தீ அல்ல. ஞானத் தீ. ஞானாக்னி. 50 வருடங்களாக இந்த தமிழகத்தை சூழ்ந்துள்ள போலி திராவிட இருளைப் போக்க இந்த தீயை நாம் மேலும், மேலும் அதிகரிக்க வேண்டும்.
 
வெள்ளையர் இனத்தை சேர்ந்த அன்னிபெசன்ட் அம்மையார் முதலானோர்கூட வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும்பொழுது, இப்பொழுது ஆன்மீக பேச்சு முக்கியமா, ஆன்மீகத்தைவிட தேச விடுதலைதான் முக்கியம் என்று எப்பொழுதும் ஆன்மீகம் பற்றி மட்டுமே பேசி கொண்டு இருந்த, தேச விடுதலைபற்றி கவலையேபடாத தனது நண்பர்களை பாரதி கடிந்து கொண்டாராம்.
 
முன் அறிவிப்பு இன்றி, அம்மாவின் ஆணைக்கு காத்திருந்து தாமதமாக ஏரி நீர் திறந்ததில் எவ்வளவு கோவில்கள் பாதிக்கப்பட்டன? சிந்தித்து பாருங்கள். அதனால், ஆன்மீக குரூப்களில்கூட இனி அரசியலை சற்று சத்தமாக பேசுங்கள். அதற்கு ஆன்மீக குரூப் அட்மின்கள் அனுமதி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
 
சர்வதேச அரசியல், சர்வதேச பொருளாதாரம், உலக வரலாறு, சிங்கப்பூர் போன்ற 100 சதவீதம் ஏழ்மையில் இருந்த நாடுகள் அசுர வேகத்தில் முன்னேறியதன் ரகசியம், நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள். அதை திருத்திக் கொள்ளும் வழிகள் முதலான அனைத்தையும் ஒவ்வொரு இளைஞன், இளைஞியர் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
விவேகானந்தர் கனவு கண்டதைப் போன்ற இளைஞர்கள் அன்று நிறைய பேர் இல்லை, பாரதியின் அறிவுரை கேட்டு அதன்படி நடக்க அன்று யாருமே தயாராக இல்லை. ஆனால் இன்று விவேகானந்தர் கனவு கண்டதை போன்றவர்கள், பாரதி கண்ட புதுயுகத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? உங்களுக்கே தெரியாமல் உங்களோடு பல பாரதிகள், விவேகமான விவேகானந்தர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
 
படிப்பு, துடிப்பு இரண்டும் உள்ள இளைஞர்களே, இன்று தமிழகத்தின் தலைவிதியை நம்மால் மாற்ற முடியும். மழை பேரிடரில் அரசாங்கம் வரும் முன்பே, இந்திய ராணுவம் வரும் முன்பே, பேரிடர் மீட்புக் குழு வரும் முன்பே, பல ஆயிரம் மக்களை காத்தது இளைஞர்கள். இளைஞர்கள் மக்கள் பணிக்கு வந்தால் மக்களிடம் ஆதரவு கிடைக்கும்.
 
தமிழகத்தில் இளைஞர்கள் தற்போது செய்த மழை வெள்ள நிவாரணப் பணியை பார்த்து பயந்து போய்தான் அரசியல்வாதிகளும், மக்கள் பணிக்கு 2, 3 நாட்கள் கழித்து நிதானமாக வீதிக்கு வந்தார்கள். ஸ்டிக்கர், போட்டோ, கேமராமேனுடன்.
 
இளைஞர்களே, நம்மில் பலர் பட்டதாரிகள். நம்மை ஆள்பவர்களும், படித்தவர்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்கள். நமது இளைஞர்கள் ஆரம்பித்து உள்ள Need A Change – 2016 எனும் முகநூல் பக்கத்திற்கு ஒரு லைக் செய்யுங்கள். முகநூலில் வாங்கும் லைக் வைத்து ஆட்சி அமைக்க முடியாதுதான். ஆனால் புதிய மாற்றத்தை எவ்வளவு தூரம் மக்கள் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த லைக் ஜஸ்ட் ஒரு சர்வே.
 
நிறைய நல்லவர்கள் இருப்பதை இந்த மழை நமக்கு உணர்த்தியது. இளைஞர்கள், அதுவும் படித்த நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வர உள்ள இந்த தகவல் மக்களுக்கு தெரிந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு நமக்கு இருக்கும். ஆனால்?
 
இந்த தகவலை நிறைய மக்களுக்கு வேகமாக கொண்டு சேர்க்க வேண்டும். இந்த தகவல் வைரலாக பரவ வேண்டும். அது, இது என படித்துக்கொண்டு இருக்கும் பொதுமக்களின் கையில் உள்ளது. அரசியல் என்னும் சந்தனத்தில், ஊழல் என்னும் சாக்கடை கலந்து விட்டதால் அரசியலும் இன்று சாக்கடை ஆகி விட்டது. இதை சுத்தம் செய்து மீண்டும் சந்தனமாக மாற்ற இளைஞர்கள் நாங்கள் தயார்.
 
அதற்கு எங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு, பெரியோர்களின் ஆசி வேண்டும். அதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.
 
இந்த மழையில் சேவை செய்த நாங்கள், அரசியலுக்கு வந்து மக்கள் பணியும் செய்ய தயார்.
 
முகநூலில் இந்த பக்கத்திற்கு லைக் பண்றவங்க பெரும்பாலும் நிச்சயமா இளைஞர்களுக்காக ஓட்டும் போடுவீங்க.
 
மாற்று அரசியலுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கு என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் இந்த பக்கத்திற்கு கொடுக்கும் லைக் ஜஸ்ட் ஒரு சர்வே.
 
 
அரசியம் மாற்றம் வேண்டும் என விரும்புவர்கள் எங்களது Need A Change – 2016 பக்கத்திற்கு லைக் என்னும் ஓட்டை போடுங்கள்.
 
அந்த முகநூல் பக்கத்தின் லிங்கை பயன்படுத்துக.
https://www.facebook.com/Need-A-Change-2016-107787219592769/
 
இளைஞர்களே விரைவாக செயல்படுங்கள்.
நமது முயற்சி வெற்றியே.
 
என்று கிருஷ்ண பிரசாத் எனும் இளைஞன் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.