தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் : நாம் தமிழர் கட்சியினர்

 
தமிழகம் எழுச்சி பெற சகாயம் ஐ.ஏ.எஸ் சீமானு்டன் இணைய வேண்டும் நாம்தமிழர் கட்சியை சேர்ந்தவர் கூறியுள்ளார் .  
 
மணிவண்ணன் ஏகாம்பரம் என்பவர் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
ஐயா சகாயம் அவர்களும் செந்தமிழன் சீமானும் ஒன்றாகி பாதை அமைத்தால் தமிழகம் பன்மடங்கு மிக சிறப்பாக எழுச்சி அடையும் !
 
உலகம் வியக்கும் நல்லாட்சி தமிழனுக்கு கிடைக்கும் , இதுவே இந்தியாவின் ஒளி மயமான வாழ்வுக்கான திறவு கோள் ஆகும்.
 
நீதிக்கான செங்கோல், உலகுக்கான அமைதிக்கு ! அத்திவாரம் தமிழன் இடப் போகின்றான் . இனி எவரும் அசைக்க முடியாத நிலை உருவாகும் இதுவே பல கோடி தமிழனின் கனவு ..ஐயா வாருங்கள் வந்து களம் ஆடுங்கள் தமிழ் இனத்தை காக்கும் பொறுப்பை ஏற்றுகொள்ளுங்கள்.
 
தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவர்க்கு
 
ஐயா உங்கள் உயர்ந்த சிந்தனைக்கு துணிவுக்கும் அயராத உழைப்புக்கும் தமிழினம் தலை வணங்கி கிடக்கின்றது…
தயங்காது வாருங்கள் ஐயா நாங்கள் பலகோடி இருகின்றோம் உங்களுடன் பயணிக்க.
 
ஐயா நாம்தமிழராக செந்தமிழன் சீமானின் ஒருங்கிணைப்பில் தியாக உணர்வும் நேர்மையும் இலட்சியமும் அண்ணன் பிரபாகரன் வழித்தடமும் வள்ளுவன் வாழ்வு நெறியும் அரசியலும் கலந்து நாம்இன்று ஒரு பாதையை அமைத்து வருகின்றோம். ஆதுபோன்றே நீங்களும் நேர்மையின் சிகரமாக எங்கள்முன் நிற்கின்றீர்கள். இந்த வறிய பிள்ளைகளை அணைத்து வழிகாட்ட எங்களுக்கு உங்களின் பெரும்பங்கு அவசியம் ஆகின்றது.
 
ஐயா உங்கள் பாதங்கள் அந்தபதையில் பயணித்தால் உலகத்தில் தமிழனை மிஞ்சிய ஒருவன்இனி வாழ்ந்தான் என்று எவரும் எழுதிவிடமுடியாது.
 
ஐயா அறிவுசார்ந்த பெருமகனாக ஆற்றல் மிக்க எங்கள் வழிகாட்டியாக நீங்கள் எங்களுக்கு கோடிட்டு காட்டுங்கள், உங்கள் மனக் கூட்டுக்குள் வாழும் பிள்ளைகளாக நம் இனத்தை காக்க சீரான நேர்மையான் நிர்வாகத்தை ஒழுக்கமான மானிட சமூகத்தை நாம்கட்டிஎழுப்புவோம்….
 
 
உங்கள் கைஅசையட்டும் செந்தமிழன்படை உங்களுடன் வந்துசேரும்……..
 
நாம்தமிழர்
மணிவண்ணன்
 
என்று  நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மணிவண்ணன் ஏகாம்பரம் அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்