மதுரை: மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
மதுரையில் சர்கார் படம் வெளியாகும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு மனு தாக்கல் செய்யப் பட்டது. சர்கார் படத்துக்கு ஆன்லைன் புக்கிங் ரூ.500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் திடீர் சோதனைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.




