ஆலங்குளம் அருகே பேருந்து மோதி இருவர் பலி

ஆலங்குளம்  அருகே அத்தியூத்து அருகே பேருந்து மோதி இருவர் பலி
கீழப்பாவூர் வைத்திலிங்கம் நாடார்  மகன் சுரேஷ்  ( 45)   மற்றும்  சாமுவேல் நாடார் மகன்  ஜார்ஜ்( 48) இருவரும் உறவினர்கள் ஆலங்குளத்தில் ஜவுளி எடுத்துக்கொண்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது அரசுப் பேருந்தை முந்தி சென்ற தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் கை துண்டாகியது இருவரும் சம்பவ இடத்திலே பலியாகினர் இது இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
விபத்து குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் தென்காசி முதல் திருநெல்வேலி வரை செல்லும் இடை நில்லாப்பேருந்தை நிறுத்தக் கோரி பல முறை பொதுமக்கள் மனு கொடுத்ததும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை இந்த பேருந்துகளால் பல விபத்துகளும் நடைபெற்று இந்த பேருந்தை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை இது மட்டுமின்றி அரசுப் பேருந்தோ தனியார் பேருந்தோ குறிபிட்ட வேகத்தில் செல்வதில்லை மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் வருவோர் எதிரே வாகங்கனங்கள் வந்தால் நிலை தடுமாறி விழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் ,மேலும் அதி வேகமாக சென்றதாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக  தெரியவில்லை ,காவல் துறையினரும் வேகமாக செல்லும் வாகனத்தை கண்காணிக்கும் கருவிகளை பயன் படுத்துவதாக தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவிகின்றனர்

இரு சக்கரவாகன ஓட்டிகளுக்கு ஒரு வேண்டுகோள்

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது  அவசியம் தலைகவசம் கட்டாயம் அணியுங்கள்

மிதமான வேகத்தில் செல்லுங்கள் 50 கீ.மீ வேகத்தை எப்போதும் தாண்டாதீர்கள்

கனரக வாகனத்தை ஒருபோதும் முந்தி செல்லாதீர்கள்

நீங்கள் செல்லும் பயண நேரத்தை கணக்கிடும் போது செல்லும் தூரத்திற்கேற்ப கூடுதலான  நேரத்தை கணக்கில் கொள்ளுங்கள் 1 மணி நேர பயண  நேரம்  என்றால் கூடுதலாக 20 நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்

உங்கள் வரவை எப்போதும் உங்கள் குடும்பம் எதிர் நோக்கி இருக்கும்