
சென்னை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
கஜா புயலால் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கியதில்லை. அரசு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தி உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு விரைவாக வழங்க வேண்டும்.
டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற பணிகளில் அரசு எப்படி செயல்பட்டது என்பதை பார்த்தோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார துறை சரி செயல்பட வேண்டும். புயலால் பலியாவதை நடக்காமல் தடுக்க வேண்டும்.
எந்த ஒரு நிதியுதவி வழங்கினாலும் ஈடு செய்ய முடியாது என்று அவர் கூறினார்.