தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரி பொது நல வழக்கு

விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று
பொது நல வழக்கு தொடரப் பட்டுள்ளது.
அந்த வழக்கை மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும்.அதிமுக-வின் இலவச சட்ட உதவி மையத்தின் செயளாலருமான ஏ. ஜெயராம், தொர்ந்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வழக்கறிஞர் கூறியுள்ளதாவது :-
‘தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு குற்றங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களிடையே அச்ச உணவை ஏற்படுத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“எதிர்காலத்தில் பொது மக்களின் அமைதியை அச்சுறுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தடுப்பது மிகவும் அவசியம். சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட என்றால் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்