khushbu evks thirunavukarasar - 2026

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவதற்கு முன் நிபந்தனையாக திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறது. திருநாவுக்கரசர் மீது ஸ்டாலினுக்கு கடுமையான அதிருப்தி.

சோனியா, ராகுலிடமும் திமுக தரப்பு இதைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசரிடம் ராஜினாமா கடிதத்தை தில்லி மேலிடம் வாங்கி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் நாளை அமெரிக்கா செல்கிறார். ஜனவரி 6 தான் தமிழகம் திரும்புகிறார். லோக்சபா தேர்தல் வியூக நேரத்தில் திருநாவுக்கரசர் வெளிநாடு செல்வது சர்ச்சையாகி உள்ளது.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதற்கும் திருநாவுக்கரசர் அழைக்கப்படவில்லை.

அனேகமாக… பீட்டர் அல்போன்ஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆகலாம்.

  • ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending