தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் மீண்டும் ஆட்சியை பிடிக்க டாஸ்மாக்’ மது விற்பனை நேரத்தை குறைக்க திட்டமா ! ?

 
தமிழகத்தில், மது விலக்கை அமல்படுத்தக் கோரி, பல்வேறு அமைப்புகள் மற்றும், எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
 
விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் மது விலக்கு பிரச்னையை, எதிர்க்கட்சிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளன. பல்வேறு மண்டலம் வாரியாக டாஸ்மாக் கடைகள் மொத்தம் 6,838-யை தமிழக அரசாங்கம் நடத்திவருகிறது . டாஸ்மாக்கடைகளில், விற்பனையாளர், எடையாளர் என, 30 ஆயிரம் ஊழியர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். மது ஆலை, கிடங்குகள், போக்குவரத்து என மேலும், 50 ஆயிரம் பேர் மறைமுகமாக பணிபுரிகின்றனர்.
 
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வாரங்களுக்கு இருமுறை தேவையான மது வகைகளை ஆதாயம்’ தரும் நிறுவனங்களிடம் இருந்து தொடர்ந்து தமிழக அரசு வாங்கி விற்பனை செய்கிறது. அதனால் அதிகமான வருமானம் அரசாங்கம் உட்ப்பட பலருக்கு அதிகமான வருமானம் கிடைக்கிறது. அதனால், தமிழகத்தில்,மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை.
 
தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும்என அக்கட்சி ஏற்கனவே கூறியுள்ளது. அதனால், 2016க்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அந்த அம்சத்தை சேர்க்க வாய்ப்பு உள்ளது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் என கூறுகின்றனர் .
 
எனவே எதிர் கட்சிகளின் திடத்தை முறியடிக்கும் வகையில் மட்டுமே டாஸ்மாக் நேரம் குறைப்பு அறிவிப்பு என்பதை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் விரைவில் வெளியிடலாம் என டாஸ்மாக் அலுவலக வட்டாரங்களில் பலர் பரவலாக பேசப்படுவதாக தெரிகிறது .
 
ஏற்கனவே மது விற்பனையை கட்டுப்படுத்த, டாஸ்மாக் கடைகளை மாலை 4:00 மணி முதல் திறக்க அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடை திறப்பு நேரத்தை குறைத்தால் மட்டும் மது விற்பனை குறையாது என அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனாலும், இது நாள் வரை ஆளும் அதிமுக அரசாங்கம் மது குறித்தான எந்த அறிவிப்பையும். வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.