தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-:
நடைபெற உள்ள தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கான மனுக்கள் தலைமைக் கழகத்தில் ஜனவரி 20 ஆம் முதல் வழங்கப்படும்.மேலும், இந்த மனுக்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனு ரூ. 11, 000
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் தலைமைக் கழகத்தில் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம், கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கட்டணம் விவரம்: தமிழ் நாடு ரூ. 11,000, புதுச்சேரி ரூ. 5,000, கேரளா ரூ. 2000. என்று வெளியிப்பட்ட அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.



