நேஷனல் ஹெரால்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சோனியா, ராகுல் காந்தி முறையீடு

Published:

நேஷனல் ஹெரால்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்த வழக்கில் தங்கள் மீது தொடர்பட்டுள்ள குற்ற வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

 

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும், அவை விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img