புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து

Published:

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் முன்னாள் தலைவர் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினர் ஒப்பந்தம் போட்டனர். இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து நடிகர் சங்க உறுப்பினர்களின் தகவல் சேகரிக்கும் குருதட்சணை திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து நடிகர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. அதில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சத்யம் சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் நடிகர்கள் பிரபு, சத்யராஜ், நடிகர் சங்க துணைத் தலைவர் கருணாஸ் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பூச்சிமுருகன் உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்,

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img