மாணவர்கள் படிப்புடன் உடல்நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

சற்றுமுன்

மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் மோடி, மாணவர்கள் தங்களின் படிப்புடன் உடல்நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் பதற்றம் அடைவதன் மூலம் பல ஆற்றல்களை நாம் வீணாக்குகிறோம். எதையும் சாதாரணமாக எண்ணி விடாதீர்கள்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து பங்கேற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், “கடின உழைப்பிற்கு ஓய்வு அவசியம். தேர்வுக்கு செய்வதற்கு முன் அமைதியாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். அதே சமயம் அது அதீத நம்பிக்கையாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஆலோசனைகள் வழங்கினார்.

பிரதமர் மோடியுடன் மனதின் குரல் நிகழ்ச்சியின் இணைந்து பங்கேற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் பேசுகையில், “மாணவர்கள் அனைவரும் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி முயல வேண்டும். நல்ல எண்ணங்கள் தான் நல்ல முடிவை தரும்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.