சமுதாய நலக்கூடம் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்

Published:

சமுதாய நல கூடம் திறப்பு விழா
பிரபாகரன் எம்.பி. திறந்து வைத்தார்.

பாவூர்சத்திரம் அருகே நாகல்குளத்தில் ரூ. 20 லட்சதில்  கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப் பட்ட சமுதாய நலக் கூடத்தை, கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி., திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி , கல்வெட்டை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ஞான அருள் பொன்னுத்தாய் வரவேற்றார்.  விழாவில் வீ.கே.புதூர் பஞ்சாயத்து தலைவர் எஸ்.எம்.பாபுராஜா, மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மப்பாண்டியன், யூனியன் துணைத் தலைவர் உத்திரகுணபாண்டியன், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.என். சொக்கலிங்கம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் நடராஜன்,  பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர்  ராதா, தலைமை கழகபேச்சாளர் தீப்பொறி அப்பாத்துரை, வேல்சாமி ,இளைங்கரணி இருளப்பன் ,மாணவரணி வெங்கடேஷ் ,இளைஞர் பாசறை சரவணன் ,பாஸ்கர்,சுரேஷ் லிகோரி ,யூனியன் கவுன்சிலர்கள் தியாகராஜன், ரமேஷ், ஊராட்சி கழக செயலாளர் திருமால் முருகன்,அமல்ராஜ்,ஐவராஜா , ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்லால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலர் வேல்முருகன் நன்றி கூறினார்

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img