மெரினாவில் மோட்டார்பைக்கை லத்தியால் அடித்து உடைத்த போலீஸார் இருவர் சஸ்பெண்ட்

சற்றுமுன் சென்னை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

சென்னை : சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் பைக்கை தாக்கிய வழக்கில் போலீஸ்காரர் மோகன் மற்றும் அவருடன் பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் ஹரிபாபு இருவரையும் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கம் செய்யபடுவதாக காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இரு சக்கர வானத்தை ரோந்து காவலர் உடைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை போர் நினைவுச் சின்னம் அருகில்,சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை,ரோந்து வந்த காவலர் ஒருவர் கம்பால் அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது! இதை அடுத்து, காவல் ஆணையர் இந்த சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.