
என் மீது எந்த கறையும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பதோஹியில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சவுதி அரேபியா சிறைகளில் உள்ள 850 இந்தியர்களை விடுவிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று, ரம்ஜான் மாதத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறினார்.



