தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் நாளை தொடங்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தென் மேற்கு பருவக்காற்று வலுப்பெற்று உள்ளதாகக் கூறினார்.
இதனிடையே இன்று மதியத்துக்கு மேல், கேரளத்தை ஒட்டிய தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதமான காற்று வீசியது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை, தென்காசி, குற்றாலம் மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. .இது சீசன் தொடங்குவதற்கான அறிகுறி என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.




