சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு வரும் வரை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று, ப்ரீ பால் (FREE BALL) என்ற ராட்சத ராண்டினத்தில் 12 பேர் அமர்ந்து விளையாடி கொண்டு இருந்த போது, ராட்டினம் அறுந்து விழுந்தது. இதில் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
இதனை அடுத்து குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள், ராட்டினங்களை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.