தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும் என்று கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை அரசு சமாளிக்கிறது என்று அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் கூறினார்..
198 நாட்கள் மழை பொழியவில்லை, தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் கூறவில்லை என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார்.
காவிரி, கிருஷ்ணா போன்ற அணைகளில் இருந்து நீர் கேட்டு வருகிறோம் விரைவில் சரியாகும் என்று கூறினார் அமைச்சர் வேலுமணி.




