சீன அதிபர் தோழர் XI JINPING அவர்களே வருக!

Published:

chinese president - 2026

*சிறுபான்மையினர் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் அரசு செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்ட தலைவரே வருக!

* ‘அரேபிய மயமாக்கல்’- நடவடிக்கைகளை முற்றிலும் தடை செய்ய உத்தரவிட்ட சீன அதிபரே வருக!

* அரபு மொழிப் பள்ளிகள் எந்தவித மதபோதனை வகுப்பும் நடத்தக் கூடாது; மசூதிகளோ இதர இஸ்லாமிய மத அமைப்புகளோ ‘கிண்டர் கார்டன்’ உள்ளிட்ட எந்தப் பள்ளிக் கூடமும் நடத்தக் கூடாது என உத்தரவிட்ட சீன அதிபர் தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* டோம் வைத்து கட்டப்பட்ட மசூதிகள், அரேபியக் கட்டிடக் கலை வடிவத்தில் ‘மினார்’ அமைப்பில் கட்டப்பட்ட மசூதிகள் ஆகியவற்றைத் தடை செய்த சீன அதிபரே வருக! அவ்வாறு கட்டப்பட்ட மசூதிகளை ‘அகற்றிய’ தோழர் XI JINPING அவர்களே வருக!

* அரபு மொழியில் எந்தக் கடைக்கும் போர்டு வைக்கக் கூடாது என உத்தரவிட்ட தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* மாமிச உணவுப் பாக்கெட்களின் மேல் ‘ஹலால்’ என்ற சொல்லை நீக்கி, இஸ்லாமிய உணவு முறைப்படி தயாரிக்கப் பட்ட உணவு என்ற வாசகத்தை நீக்க உத்தரவிட்ட தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

* தொழுகைக்கு மைக்கைக் கட்டி ஒலி எழுப்பி அழைப்பதைத் தடை செய்து, அப்படி அழைத்த மசூதிகளுக்கு உள்ளே போய் அந்த இமாம்களை எச்சரித்த அதிகாரிகளைக் கொண்ட சீன நாட்டின் அதிபர் தோழர் ஜிங்பிங் அவர்களே வருக!

* அப்படி அரசு அனுமதி பெறாமல் செயல்பட்ட மசூதிகளைப் பூட்டி சீல் வைத்த சீன அரசின் துணிவு மிக்க தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

* மசூதிகளின் முன்பு சீன தேசத்தின் பெரிய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, அந்தக் கொடியில் ‘உன் மதத்தை நேசி – உன் தேசத்தை நேசி’- என்ற வாசகங்களையும் இடம் பெற வைத்த தேசபக்தி மிக்க தோழர் ஜிங்பிங் அவர்களே வருக!

* 1975 ல், தோழர் மா-சே-துங் அவர்கள் ‘கலாசாரப் புரட்சி’ நடத்திய போது, யுனான் மாகாணத்தில், கலகம் செய்த இஸ்லாமியர்களில் 1600 க்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்து அந்த ஷாதியான் என்ற நகரத்தையே தரை மட்டமாக்கிய சீன தேசத்தின் அதிபர் தோழர் ஜின்பிங் அவர்களே வருக!

ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

* இப்படி எல்லாம் ‘தீக்கதிர்’ தலைப்புச் செய்தி போடாது! இதை எல்லாம் NEWYORK TIMES ஏட்டில் (10 10 2019) ஏட்டில் தேடினால்தான் கிடைக்கும்!

  • முரளி சீத்தாராமன் (Murali Seetharaman)

theekathir - 2026

நாளை தமிழகம் வருகிறார் தோழர் ஜின்பிங். தமிழக முதல்வருடன் முக்கியப் பேச்சுவார்த்தைக்கு வரும் அவரை மரியாதை நிமித்தம் இந்தியப் பிரதமர் மோடி வந்து சந்திக்கிறார். தமிழகத்துடன் பல ஒப்பந்தங்களை உறுதி செய்யும் அவர் தமிழத்தின் சி.பி.எம். கட்சி நிர்வாகிகளோடு தனியே கலந்துரையாடுகிறார்.

அடேய் பக்கிகளா…அவர் இந்தியா வருகிறாரடா…உங்கள் போன்ற அடிமைகள் இரண்டு கிமி தள்ளி இருந்துதான் அவரைப் பார்க்கவே முடியும்..தோழராம் தோழர்..

அதுசரி, தோழரின் வழியில் இந்திய முஸ்லிம்களையும் ரீ எடுகேஷன் முகாமிற்கு அனுப்ப இந்திய அரசுக்குக் கோரிக்கை வைங்களேன்..உங்கள் ஆண்மையைப் பார்ப்போம்ம்ம்ம்ம்ம்!

  • நம்பி நாராயணன் (ஆசிரியர், ஒரேநாடு)

Related articles

Recent articles

spot_img