விக்கிரவாண்டியில் ஒரு ஓட்டுக்கு ரூ.8.ஆயிரம் அதிமுக கொடுப்பதாக துரைமுருகன் குற்றசாட்டு.!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி புகார் பெட்டி
Durimurugan - 2026

அதிமுக பணம் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் வாக்களா்களுக்கு துரைமுருகன் வேண்டுகோள்.!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து திமுக பொருளாளர் துரைமுருகன் அன்னியூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, விக்கிரவாண்டியில் திமுக குறைந்த பட்சம் 25 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெறும்,

எடப்பாடி பழனிசாமி பண பலத்தாலும் அதிகாரிகள் பலத்தாலும் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்.

ஆனால், முக ஸ்டாலின் இருக்கும் போது அது நடக்காது என்று கூறியுள்ளார்.

அதனையடுத்து, திமுக ஆட்சியில் விவாசியாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டது,

பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது என திமுக ஆட்சியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்த துரை முருகன், நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஒரு வாக்குக்கு அதிமுக ரூ.8 ஆயிரம் வரை கொடுக்க முயல்கிறது, அப்படிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், நந்தன் கால்வாய் திட்டம் பற்றி தற்போது ஆட்சியில் அதிமுக பொதுப்பணித்துறை அமைச்சருக்கு ஒன்றுமே தெரியாது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டத்தை நான் முடித்து வைப்பேன் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.