பிப்ரவரி 24, 2021, 11:35 மணி புதன்கிழமை
More

  பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

  Home லைஃப் ஸ்டைல் பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

  பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

  பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் உறுதிப் படுத்தியுள்ளது.

  modi-speech
  modi-speech

  பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் உறுதிப் படுத்தியுள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடிக்கு @narendramodi_in என்ற தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு உள்ளது. இதில், பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு கிரிப்டோகரன்ஸி என்று கூறப்படும் பிட்காயின் மூலம் நிதி உதவியை செலுத்தும் படி வரிசையாக டிவிட்கள் வெளியாகின. இதை அடுத்து, ஒரு கும்பல் பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து, இவ்வாறு பதிவிடுவது தெரியவந்தது.

  இது குறித்து டுவிட்டர் நி்ர்வாகமும் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தது. இந்நிலையில், மோடியின் டுவிட்டர் கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

  pm-Twitter
  pm-Twitter

  கடந்த ஜூலை மாதத்தில்தான் கிரிப்டோ கரன்ஸி பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன. இது, பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸி பண பரிவர்த்தனை கும்பலின் கைவரிசை என்று தெரியவந்தது.

  இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப் பட்டுள்ளது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari