
வாழைப்பழ கஸ்டர்ட்
தேவையானவை:
நறுக்கிய வாழைப்பழம் – ஒரு கப், நறுக்கிய மாம்பழம்,
ஆப்பிள்,
பலாச்சுளை,
முழு பச்சைத் திராட்சை
(எல்லாம் சேர்த்து) – ஒரு கப்,
பால் – 2 கப்,
சர்க்கரை – அரை கப்,
கஸ்டர்ட் பவுடர். – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
பாலை சர்க்கரை சேர்த்துக் காய்ச்சவும். மிதமாக சூடாகும்போதே கால் கப் பாலை எடுத்து கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும்.
பால் – கஸ்டர்ட் பவுடர் இரண்டும் சேர்ந்து வரும்போது இறக்கி, ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரவிடவும். பரிமாறுவதற்கு 10 நிமிடங்கள் முன்பு எடுத்து, பழங்களைச் சேர்த்து கலந்துவிடவும்.
குறிப்பு: பரிமாறுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு பழங்களை ‘கட்’ செய்தால் போதும். வெனிலா, ஸ்ட்ராபெர்ரி என்று எந்த ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடர் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.